வத்தலக்குண்டு அருகே போலீஸ்காரரை தாக்கிய மேலும் 3 பேர் கைது
வத்தலக்குண்டு அருகே விருவீடு சோதனைச்சாவடியில் போலீஸ்காரரை தாக்கிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே விருவீடு சோதனைச்சாவடியில் போலீஸ்காரரை தாக்கிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராளன், போலீஸ்காரர் லோகநாதன் ஆகியோர் கடந்த 23-ந்தேதி பணியில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த 6 வாலிபர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். இவர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.
இதில் போலீஸ்காரர் லோகநாதனை, தென்னை மட்டை மற்றும் உருட்டுக்கட்டையால் 6 பேரும் சேர்ந்து தாக்கினர். இதை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சீராளனையும் அவர்கள் தாக்க முயற்சி செய்தனர்.
மேலும் 3 பேர் கைது
இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வாலிபர்கள், போலீஸ்காரரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாணிக்கம் (வயது 25), ரஞ்சித் (27), காளிதாஸ் (27) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அஜீத் (26), தமிழரசன் (27), நவீன் (26) ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் 3 பேரும், நல்லுத்தேவன்பட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அஜீத் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story