ஆர்ப்பாட்டம்
செட்டியார்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தளவாய்புரம்,
செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிறுத்தத்தில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இங்கு தள்ளுவண்டியில் இருசக்கர வாகனத்தை வைத்து அதனை தள்ளி செல்வது போலவும், நுங்கு வண்டி தயாரித்து அதனை சாலையில் ஓட்டிச்செல்வது போலவும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாரத், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் ராமர், செட்டியார்பட்டி நகர செயலாளர் சந்தனகுமார், மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story