இன்று முதல் 358 பஸ்கள் இயக்கம்


இன்று முதல் 358 பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2021 1:04 AM IST (Updated: 28 Jun 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மண்டலத்தில் இன்று முதல் 358 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

விருதுநகர், 
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மண்டலத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 200 டவுண்பஸ்களும், 158 புறநகர் பஸ்களும் ஆக மொத்தம் 358 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 35 புறநகர் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
மேலும் பெண்களுக்கு சாதாரண கட்டணத்தில் டவுண் பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மண்டலத்தில் 167 சாதாரண கட்டண டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் பயணிகள் அரசு அறிவித்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story