இட்டமொழி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் மீது வழக்கு
இட்டமொழி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இட்டமொழி:
இட்டமொழி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தகராறு
இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் சுந்தர் (வயது 55), பனையேறும் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் சித்திரவேல் மகன் மணிகண்டன் (30) டிரைவர்.
நேற்று முன்தினம் சுந்தர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் அவதூறாக பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன், தன்னைத்தான் சுந்தர் பேசுவதாக நினைத்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மணிகண்டன் தனது உறவினர்கள் சுரேஷ் (33), விக்னேஷ் (26) ஆகியோருடன் வந்து சுந்தர் மற்றும் அவரது மகன்கள் 2 பேருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அரிவாள் வெட்டு
தகராறு முற்றியதில் சுந்தர், மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story