குடும்பத்தினருக்கு நிவாரண உதவி


குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 28 Jun 2021 1:10 AM IST (Updated: 28 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
 நிவாரண உதவி
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் 20 பேருக்கு ரூ.29 லட்சத்திற்கான காசோலைகளை நிவாரண உதவியாக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கல்வி அலுவலகத்திற்கு மட்டும் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான இடத்தினை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள  ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
இருக்கன்குடி 
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிலையான சம்பளமின்றி கோவிலில் பணியாற்றும் பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் இதர பணியாளர்கள் 81 பேருக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது அவர்களுக்கான 14 வகையான மளிகை உள்ளடங்கிய தொகுப்பினையும் வழங்கினார். இதனை தொடர்ந்து நத்தத்துப்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமினையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதில் மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, இருக்கன்குடிகோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன், பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி, சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story