தடையை மீறி களக்காடு அருவியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
களக்காடு:
ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
தேங்காய் உருளி அருவி
தமிழகம் முழுவதும் 2-ம் கட்ட கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் களக்காடு தலையணை சுற்றுலா தலமும் மூடப்பட்டுள்ளது. தற்போது தலையணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக களக்காடு தலையணை மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் மற்றும் தேங்காய் உருளி அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிவபுரம் தேங்காய் உருளி அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
பொதுமக்கள் குவிந்தனர்
ஊரடங்கு அமலில் இருந்தபோதும் வெளியூர்களில் இருந்து கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இதனால் உள்ளூர்வாசிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று வெளியூர் பொதுமக்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்தனர்.
தடை உத்தரவு, கொரோனா அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் அவர்கள் வழக்கம்போல் குளித்து பொழுதைப் போக்கினர்.
இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், “வெளியூர்க்காரர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு வைரஸ் பரவினால் அது வன விலங்குகளையும் பாதிக்கும்” என்று கவலையுடன் கூறினர்.
Related Tags :
Next Story