தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்
செங்கோட்டையில் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் ஜே.சி.ஐ. தொண்டு அமைப்பு சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முதியோர், ஆதவரற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் தன்னார்வ சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஜே.சி.ஐ. அமைப்பினா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைப்பின் தலைவா் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலா்கள் ராமதாஸ், முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அந்தோணிராம் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 125 தன்னார்வலா்களுக்கு பாராட்டு ்சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுடர்ஒளி ராமதாஸ், நித்யகல்யாணி, பேச்சியம்மாள், பிச்சைநாதன் என்ற குமார் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நித்யானந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story