கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 2:21 AM IST (Updated: 28 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார்.

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நடுவக்குறிச்சி சாலை பாலாஜி நகர் 1-வது வார்டில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் வல்லராமபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் தவறி விழுந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் அங்கு வந்தனர். முதுகில் அடிபட்ட நிலையில் மேலே வரமுடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை உயிருடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Next Story