மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை நுழைவு வாயில் பகுதியில் நின்று பார்த்துவிட்டு சென்ற சுற்றுலா பயணிகள்


மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை நுழைவு வாயில் பகுதியில் நின்று பார்த்துவிட்டு சென்ற சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 28 Jun 2021 2:41 AM GMT (Updated: 28 Jun 2021 2:41 AM GMT)

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர்.

அவர்கள் கட்டணமில்லாமல் கண்டுகளிக்க கூடிய அர்ச்சுனன் தபசு புராதன சின்னத்தை கண்டு களித்தனர்.

கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் நேற்று திறக்கப்படாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நின்று பலரும் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

Next Story