திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் ரெயில்நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
ரெயில் மூலம் பயணம் செய்து திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளிவரும் பயணிகள் திருவள்ளூர் தேரடி, பஸ்நிலையம் போன்றவற்றுக்கு பஸ் மற்றும் ஆட்டோக்களில் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் ரெயில்நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பயணிகளை ஏற்ற வேண்டும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து அரசின் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து நடக்க வேண்டும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story