ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை வந்த கப்பல் என்ஜினீயா் கைது


ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை வந்த கப்பல் என்ஜினீயா் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 11:11 AM IST (Updated: 28 Jun 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை வந்த கப்பல் என்ஜினீயா் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சோ்ந்த சக்திவேல் (வயது 49) என்பவரது பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.

அவர், கப்பலில் சா்வீஸ் என்ஜினீயராக பணியாற்ற 2018-ம் ஆண்டில் துபாயில் உள்ள ஒரு தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணியில் சோ்ந்தாா். சக்திவேல் பணி காரணமாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2 முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் துபாய் திரும்பியதாக தெரிய வந்தது.

இந்திய அரசு, 2014-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் யாரும் ஏமன் மற்றும் லிபியா நாடுகளுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்து உள்ளது. அதை மீறி தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றுவரும் இந்தியா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.

இதையடுத்து சக்திவேலை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினா். ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது எனக்கு தெரியாது. அலுவலக பணியாகவே சென்றேன். தனிப்பட்ட முறையில் செல்லவில்லை என அதிகாரிகளிடம் சக்திவேல் கூறினார்.

கைதான சக்திவேலை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனா். போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலிடம் விசாரித்து வருகி்ன்றனர்.

Next Story