மக்காச்சோள விலை உயர்வு


மக்காச்சோள விலை உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2021 5:41 PM IST (Updated: 28 Jun 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் மக்காச்சோள விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, விருப்பாச்சி, ராமபட்டினம்புதூர், கோம்பைபட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, கொத்தயம், தேவத்தூர், கள்ளிமந்தயம் ஆகிய ஊர்களிலும் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

தற்போது அந்த பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்காச்சோளத்தை பொறுத்தவரையில் கோழி, மாட்டு தீவனங்கள் தயாரிக்க அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் மக்காச்சோளத்துக்கு கிராக்கி உள்ளது. 

இந்தநிலையில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் மக்காச்சோள மகசூல் இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால் விலை ஏறுமுகமாக உள்ளது.

கடந்த ஆண்டில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளத்தை ரூ.1,450-க்கு மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். 

தற்போது 100 கிலோ மூட்டையை ரூ.1,830-க்கு மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இங்கு முகாமிட்டு, லாரிகளில் மக்காச்சோளத்தை ஏற்றி வியாபாரிகள் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story