ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 2 வாரமாக இந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வாரம் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
நகைக்கடைகள் திறப்பு
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் நேற்று காலையில் திறக்கப்பட்டன. கடைகளின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து விற்பனை தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களும் வழக்கம் போல் கடைகளுக்கு சென்று ஜவுளி மற்றும் நகைகளை வாங்கி சென்றனர்.
உடற்பயிற்சி கூடம்
இதே போன்று நடைபயிற்சி செய்வதற்காக மட்டும் பூங்காக்கள் திறக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் உடற்பயிற்சி கூடங்களும் நேற்று திறக்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story