பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி உள்பட 20 இ்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  தேனி உள்பட 20 இ்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
x
தினத்தந்தி 28 Jun 2021 7:21 PM IST (Updated: 28 Jun 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி உள்பட 20 இ்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தேனி :
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தி விலையை குறைக்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், கொரோனா தடுப்பு மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுக்க வேண்டும், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம், பெரியகுளம் உள்பட 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் நாகரத்தினம், சுருளி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, எஸ்.யு.சி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
பெரியகுளம்
இதுபோல பெரியகுளம் தென்கரை மூன்றாந்தலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், வெண்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக், நகர செயலாளர் ஜோதிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல், மாவட்டத்தின் மற்ற இடங்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story