ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பரபரப்பு
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பரபரப்பு.
கூடலூர்,
கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த யானைகளை விரட்ட கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
அதன்படி நேற்று மாலை அங்குள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த ஒரு காட்டுயானையை வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மாக்கமூலா பகுதியில் மாலை 3 மணிக்கு மற்றொரு காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story