10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 28 Jun 2021 7:48 PM IST (Updated: 28 Jun 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தி முகாமில் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தி முகாமில் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஜமாபந்தி முகாம்

கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, நெடுகுளா உள்வட்டத்துக்கான ஜமாபந்தி முகாம், நேற்று தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.  
இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். 

முன்னதாக அந்த வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை அலுவலகத்துக்கு நேரில் வந்து அளிக்காமல் இ-சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

நலத்திட்ட உதவிகள்

அதன்படி வந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  மொத்தம் 12 மனுக்கள் வந்து இருந்தது. அந்த மனுக்களை கலெக்டர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக பட்டா மாறுதல், நிலவரி உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதில் உதவி கலெக்டர் லோகநாயகி, அதிகாரி ரவிகுமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


Next Story