வானகிரி மீனவர் கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் மீன் உலர் களம் அமைக்கும் பணிகள் ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு


வானகிரி மீனவர் கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் மீன் உலர் களம் அமைக்கும் பணிகள் ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jun 2021 10:16 PM IST (Updated: 28 Jun 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

வானகிரி மீனவர் கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் மீன் உலர் களம் அமைக்கும் பணிகள் ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு.

திருவெண்காடு,

பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவர் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்த ஏதுவாக மீன் உலர் களம் அமைத்து தர வேண்டுமென ஒன்றியக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மீன் உலர் களம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து வானகிரி மீனவர் கிராமத்தில் மீன் உலர் களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

கடலோர மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மடத்து குப்பம், கீழ மூவர் கரை ஆகிய இடங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மீன் உலர் களம் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உங்கள் தொகுதியில் திட்டத்தின் கீழ் நாயக்கர் குப்பம் கடற்கரைச்சாலை, தென்னம் பட்டினத்தில் மயான மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மீனவர் அணி செயலாளர் தேசப்பன், ஊராட்சி தலைவர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story