பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் லாரிகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரிகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மன்னார்குடி:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரிகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
கொரோனா தொற்றால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் லாரி உள்ளிட்ட சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
அதனை தொடர்ந்து மன்னார்குடி மேலப்பாலம் அருகில் உள்ள லாரி நிறுத்துமிடத்தில் லாரிகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி தாலுகா லாரி உரிமையாளர் சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ராஜா, பொருளாளர் நீலகண்டன், துணைத்தலைவர் ராஜாராம், துணைச்செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். லாரிகளுக்கான காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக போராட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தபோராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.
Related Tags :
Next Story