கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் பாதரக்குடி காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் வரவேற்று பேசினார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கவேண்டும். குடும்பத்தில் உள்ள நபர் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் இனிய தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறுப்பாளர்கள் சேக்இஸ்மாயில், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் நிர்வாகிகள் ராஜமோகன், சர்புதீன், பெரும்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story