நாமக்கல்லில் மாடு திருடிய பெண் உள்பட 2 பேர் கைது


நாமக்கல்லில் மாடு திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 10:47 PM IST (Updated: 28 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மாடு திருடிய பெண் உள்பட 2 பேர் கைது.

நாமக்கல்,

நாமக்கல் வகுரம்பட்டியை சேர்ந்தவர் சுவாதிராஜ் (வயது 30). இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை தனது தோட்டத்தில் கட்டி வைத்து இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் மாடுகள் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து மாடுகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுவாதிராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை திருடி சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமார் மனைவி ரேவதி (35), நாமக்கல் நாகராஜபுரத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வரதராஜன் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மாடுகள் நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் கட்டி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Next Story