கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் மனமுடைந்த புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்
சங்கராபுரம்
புதுப்பெண்
சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி(வயது 40). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் லட்சுமி(20) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பு தண்டபாணி மது குடித்து விட்டு வந்து லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் ஆற்றுபாதை தெருவை சேர்ந்த வேறுஒரு பெண்ணிடம் தண்டபாணி கள்ள தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதை அறிந்த லட்சுமி மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வீட்டின் பின்புறம் தனக்கு தானே உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒடோடி வந்து லட்சுமியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கோட்டாட்சியர் விசாரணை
இதுகுறித்து லட்சுமியின் தாய் உண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்தார். மேலும் திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் லட்சுமியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர்(பொறுப்பு) சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story