பரமத்திவேலூர் அருகே மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பரமத்திவேலூர் அருகே மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). மெக்கானிக். இவருடைய மனைவி சந்திரா (40). இவர்களுக்கு சசிகுமார் (21) என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராஜ் கடந்த 6 ஆண்டுகளாக மனைவியையும், மகனையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிசை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
===========
Related Tags :
Next Story