நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,327 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,327 ஆக அதிகரிப்பு.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 44,327 ஆக அதிகரித்து உள்ளது.
184 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,143 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,327 ஆக அதிகரித்து உள்ளது.
ஒருவர் சாவு
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 293 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 42 ஆயிரத்து 108 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 1,805 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 413 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்து உள்ளது.
==========
Related Tags :
Next Story