கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்


கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:19 PM IST (Updated: 28 Jun 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை

கோவை சரவணம்பட்டி-துடியலூர் ரோட்டில் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருப்பதி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜெய்சங்கர், ஜேக்கப் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இதில் பெர்னார்டு, ஞானசேகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கும்பலை பிடித்த போலீசாரை போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story