அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரே நாளில் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கோவை
கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரே நாளில் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் பணி
கோவை மாவட்டத்தில் கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் கோவை உள்பட 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட 27 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் கூடுதல் தளர்வாக கோவை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இயக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு கட்டங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
800 பேருக்கு தடுப்பூசி
அதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதனை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தொடங்கிவைத்தார். பொது மேலாளர் மகேந்திரகுமார், நகர் நல உதவி அலுவலர் டாக்டர் வசந்த் ஆகியோர் முன்னிலைவகித்தார்.
இந்த முகாமில் போக்குவரத்து கழக பஸ் டிரைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.
இதில் கோவேக்சின் தடுப்பூசி 500 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 300 பேருக்கும் என மொத்தம் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் விடுபட்டவர்களுக்கு மற்றொரு நாளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story