கைக்குழந்தையுடன் இளம்பெண் போலீசில் புகார்


கைக்குழந்தையுடன் இளம்பெண் போலீசில் புகார்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:37 PM IST (Updated: 28 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கைக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் போலீசில் புகார் செய்து உள்ளார்.

காரைக்குடி,

காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 21). இவருக்கும் அரியக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24)என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து உள்ளார். அதன்பின்னர் வெளிநாடு சென்று விட்டார். இந்த நிலையில் கர்ப்பமான கார்த்திகா செல்போன் மூலம் தமிழ்செல்வனை தொடர்பு கொண்ட போது வெளியே யாரிடமும் சொல்லாதே. ஊருக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கிறார். இதை நம்பி அவர் குழந்தை பெற்று உள்ளார். இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய தமிழ்செல்வன் அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து கைக்குழந்தையுடன் கார்த்திகா புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story