கிணத்துக்கடவு அருகே காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை வனத்துறையினர் பார்வையிட்டனர்.


கிணத்துக்கடவு அருகே காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை வனத்துறையினர் பார்வையிட்டனர்.
x
தினத்தந்தி 28 Jun 2021 11:40 PM IST (Updated: 28 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை வனத்துறையினர் பார்வையிட்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்குள்ள தோட்டங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து காட்டு பன்றிகள் அட்டகாசம் குறித்து கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி மற்றும் விவசாயிகள் பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

இந்த நிலையில் நேற்று கோதவாடி கிராமத்திற்கு பொள்ளாச்சி வன அலுவலர் மெய்யப்பன் தலைமையில் வனத்துறையினர் வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோதவாடி பகுதியில் காட்டு பன்றிகள் சேதப்படுத்திய மரவள்ளி கிழங்கு செடிகள், வாழைகளை ஆகியவற்றை பார்வையிட்டனர். 

அப்போது விவசாயிகள், பயிர்களை நாசம் செய்துவரும் காட்டு பன்றிகளை கூண்டு வைத்து அல்லது சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறினர்.

அதற்கு வனத்துறையினர் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து மனு கொடுங்கள். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story