மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்குபொது போக்குவரத்து தொடங்கியதுஅரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை + "||" + buses from dharmapuri

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்குபொது போக்குவரத்து தொடங்கியதுஅரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்குபொது போக்குவரத்து தொடங்கியதுஅரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொது போக்குவரத்து தொடங்கியது அரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொது போக்குவரத்து தொடங்கியது. அரசு பஸ்கள் இயங்கின. தனியார் பஸ் ஓடவில்லை.
பொது போக்குவரத்து
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று குறைந்துள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு நேற்று முதல் பொது போக்குவரத்து தொடங்கியது. 
இதன் காரணமாக இந்த 2 மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ்கள் இயங்கின. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்தந்த பஸ் நிலையங்களில் உள்ள கடைகளும் திறக்கப்படாமல் இருந்தது.
முககவசம்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட முக்கிய ஊர்களிலுள்ள பஸ் நிலையங்களில் இருந்து நேற்று காலை முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. 
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தொற்று பாதிப்பு அதிகமுள்ள சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்களில் ஏறும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தனியார் பஸ்கள்
பொது போக்குவரத்து தொடங்கிய நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. 100 சதவீத பயணிகளை ஏற்றி கொள்ள அனுமதி அளித்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தர்மபுரி நகரில் உள்ள புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் இருந்து நேற்று முதல் வழக்கமாக அரசு பஸ்கள் இயங்கின. முக்கிய ஊர்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. சேலத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பஸ்கள் வழக்கம்போல் ஓடினாலும் தர்மபுரியில் உள்ள இந்த 2 பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன. அங்குள்ள பெரும்பாலான கடைகளும் திறக்கப்படவில்லை.
அரூர்
அரூர் பஸ் நிலையத்தில் இருந்து கிராம பகுதி மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் முககவசம் அணிந்து பஸ்சில் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா.
2. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா
3. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
5. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு