உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு


உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jun 2021 11:47 PM IST (Updated: 28 Jun 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே அரிசி குடோனில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் தொல்லை இருப்பதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி பகுதியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் குடோன் உள்ளது. இங்கு ஏராளமான நெல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல் மூடைகள் நாள்பட இருப்பதால் இதிலிருந்து பூச்சிகள் வெளியேறி அருகில் வசிக்கும் வீடுகளில் இரவு நேரங்களில் சென்று மக்களுக்கு தொந்தரவு செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் மாவட்ட நியமன அதிகாரி மருத்துவர் பிரபாவதி, மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதிகப்படியான பூச்சிகள் வெளியேறி அருகில் இருக்கும் வீடுகளில் தொந்தரவு செய்வதாக உறுதி செய்யப்பட்டும் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்து உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க பூவந்தி வட்டார மருத்துவ அலுவலருக்கு நியமன அதிகாரி பிரபாவதி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story