50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் ஓடின


50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 28 Jun 2021 11:50 PM IST (Updated: 28 Jun 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் ஓட தொடங்கியது.அத்துடன் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளும் திறக்கப்பட்டன.

சிவகங்கை,

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் ஓட தொடங்கியது.அத்துடன் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளும்  திறக்கப்பட்டன.

50 சதவீத பயணிகள்

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.இதே போல் ஜவுளிகடைகள் மற்றும் நகைகடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.நோய் தாக்கம் குறைய, குறைய படிபடியாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முதல் பஸ் போக்குவரத்தை 50 சதவீத பயணிகளுடன் தொடங்க அரசு அனுமதியளித்தது.அத்துடன் ஜவுளிகடைகள் மற்றும் நகை கடைகளை திறக்கவும் அனுமதியளித்தது.

பஸ்கள் ஓடின

அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று காலை முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 241 பஸ்கள் காலை 5 மணி முதல் இயக்கப்பட்டன.
இதில் காரைக்குடி பகுதியில் 24 நகர்புற பஸ்களும், 26 புறநகர் பஸ்களும், தேவகோட்டை பகுதியில் 25 நகர்ப்புற பஸ்களும், 30 புறநகர் பஸ்களும், திருப்பத்தூர் பகுதியில் 15 நகர்ப்புற பஸ்களும், 19 புறநகர் பஸ்களும்,  சிவகங்கை பகுதியில் 33 நகர்புற பஸ்களும்,  27 புறநகர் பஸ்களும், மதுரையிலிருந்து 42 புறநகர் பஸ்களும் சேர்த்து மொத்தம் 241 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்பட்டனர்.அத்துடன் முககவசம் அணிந்த பயணிகளே பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் கைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை.திருப்புவனம் பணிமனையில் உள்ள 42 டவுன் பஸ்களில் 38 பஸ்கள் ஓடத் தொடங்கின. முன்னதாக பஸ்களுக்கு பணிமனையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு

ஊரடங்கு தளர்வையொட்டி அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை,திருப்பத்தூர், மானாமதுரை, இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்புவனம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகள் திறக்கப்பட்டன. ஜவுளிக்கடை, நகைக்கடை ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேற்று வேலைக்கு வந்தனர். கடைகளிலும் ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

Next Story