கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
கரூர்
கொரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளையும், தனிநபர் கோரிக்கைகளையும் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கடந்த வாரம் காணொலிக்காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் 60 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 51 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளன. 5 மனுக்கள் உரிய காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 4 மனுக்கள் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தால் நிலுவையில் உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story