பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் குடிநீர் தட்டுப்பாடு
பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி
நங்காஞ்சி ஆறு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது நங்காஞ்சி ஆற்றில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. சீமை கருவேல மரங்கள் அப்பகுதிகளில் அதிக அளவில் நீரை உறிஞ்சுகின்றன. மேலும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகள், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றில் நீர்மட்டம் பெருமளவில் குறைந்துவிட்டன.
கோரிக்கை
இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ஆறு முற்றிலும் மாசடைந்து வருகிறது. எனவே பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story