பா.ஜ.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பா.ஜ.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 29 Jun 2021 12:02 AM IST (Updated: 29 Jun 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரூர்
கரூர் வெங்கமேட்டில் நேற்று மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கி பேசினார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை அதிகமாக மின்வெட்டு இருந்த மாநிலம் தமிழகம். ஆனால் 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மின் உபரி என்கிற மாநிலமாக இருந்தது. ஆனால் 2 மாதங்களில் எப்படி மின் பற்றாக்குறையாக மாறியது. அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்சாரத்துறை அமைச்சர் இதுபோன்ற காரணங்கள் கூறுவதை தவிர்த்து விட்டு, இந்த மின்தடை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து கண்டறியவேண்டும். என்றார்.


Next Story