அரசு பஸ்கள் இயக்கம்; ஜவுளி, நகை கடைகள் திறப்பு. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்


அரசு பஸ்கள் இயக்கம்; ஜவுளி, நகை கடைகள் திறப்பு. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்
x
தினத்தந்தி 29 Jun 2021 12:09 AM IST (Updated: 29 Jun 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், ஜவுளி, நகை கடைகள் திறக்கப்பட்டதாலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

திருப்பத்தூர்

அரசு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், உட்கோட்ட எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 50 சதவீத பஸ்கள் இயங்கியது.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்

 விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பஸ்களில் 24 டவுன் பஸ்கள் 35 புறநகர் பஸ்கள், தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட 91 பஸ்கள் இயக்கப்பட்டது. தனியார் பஸ்கள் ஓடவில்லை. சுமார் 50 நாட்களுக்கும் மேலாக பஸ் போக்குவரத்து சேவை இல்லாத நிலையில் தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் வெளியூர்களுக்கும், அலுவலகங்களுக்கும் பஸ்களில் சென்று வந்தனர். பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
அதேபோல திருப்பத்தூர் மாவட்டம்  முழுவதும் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.

Next Story