திருப்பூரில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனால் பள்ளிகளில் பெற்றோர் குவிந்தனர்.
திருப்பூரில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனால் பள்ளிகளில் பெற்றோர் குவிந்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனால் பள்ளிகளில் பெற்றோர் குவிந்தனர்.
மாணவ-மாணவிகள் சேர்க்கை
கொரோனா பாதிப்பின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்தது. இதில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடர்பான பணிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு அனுமதி வழங்கியது. இதனால் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நேற்று மும்முரமாக நடந்தது.
குவிந்தனர்
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நேற்று பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளை சேர்க்க வந்தனர். முன்னதாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் மாணவிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாணவிகள் விருப்பப்படி அவர்கள் விரும்பிய வகுப்புகளில் சேர்ந்தனர். இதுபோல் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,திருப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று மாணவ-மாணவிகள் சேர்க்கைக்காக ஏராளமானவர்கள் விண்ணப்பத்துடன் குவிந்தனர். முண்டியடித்துக்கொண்டு பலரும் விண்ணப்பங்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story