ராணிப்பேட்டை மாவட்டத்தில் பயணிகள் கூட்டம் இன்றி இயங்கிய அரசு பஸ்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள் ஓடத்தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
சிப்காட்
பஸ்கள் ஓடியது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக நேற்று முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் பஸ்கள் இயக்க அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி நேற்று ராணிப்பேட்டை பகுதியில் பஸ்கள் ஓடியது. .ஆனால் பஸ்களில் பயணிகள் கூட்டமின்றி இயக்க அனுமதித்திருந்த போதிலும், பஸ்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் மேற்கொண்டனர்.
பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்தே பயணித்தனர். அனைத்து டவுன் பஸ்களிலும் ‘மகளிர் கட்டணமில்லா பயணம்' என்ற அறிவிப்பு ஸ்டிக்கர் முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெண்கள் ஆர்வத்துடன் அரசு டவுன் பஸ்களில் ஏறி பயணம் மேற்கொண்டனர். இதனால் தனியார் பஸ்களில் பெண்கள் குறைவாகவே காணப்படனர்.
கூட்டம் இல்லை
ராணிப்பேட்டை பகுதியில் இருந்து வியாபாரம் நிமித்தமாக சென்னைக்கு செல்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும், கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாததாலும் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
பஸ்கள் இயக்கப்பட்டதாலும், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதாலும், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியதாலும், பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.
Related Tags :
Next Story