திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 Jun 2021 12:39 AM IST (Updated: 29 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு அதிகளவு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருவார்கள். இவ்வாறு வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் கூண்டு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சந்தை செயல்பட தொடங்கியதும், சந்தைக்கு வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Next Story