பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 12:40 AM IST (Updated: 29 Jun 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்
-
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

 ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆர்.ஆனந்தன், தங்கப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சாதிக், கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.50-க்கும், டீசல் ரூ.40- க்கும் வழங்க வேண்டும், கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் ரூ.7,500 உதவித்தொகை வழங்க வேண்டும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட , கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோன்று கந்திலியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் நந்தி, புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகிலும், ஆசிரியர் நகர் பஸ் நிலையம் அருகிலும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story