உடுமலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.


உடுமலை  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
x
தினத்தந்தி 29 Jun 2021 12:59 AM IST (Updated: 29 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உடுமலை:
உடுமலை  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது. 
279 அரசுபள்ளிகள்
உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இந்த 3 வட்டாரங்களை கொண்ட உடுமலை கல்வி மாவட்டத்தில் 190 அரசு தொடக்கப்பள்ளிகளும், 5அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளும், 45 அரசு நடுநிலைப்பள்ளிகளும், ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியும் உள்ளன.
மேலும் 16அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 5 அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளும், 17அரசு உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மொத்தத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் அரசு பள்ளிகள்மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள்279 உள்ளன.
பாடபுத்தகங்கள் வினியோகம்
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடபுத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து கல்வித்துறை உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி இந்த பாடபுத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாணவ, மாணவிகளுக்கு வினியோகம் நேற்று  தொடங்கியது
மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து பாடபுத்தகங்களை வாங்கி சென்றனர்.
உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளி தலைமைஆசிரியை ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர் தி.சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாணவர் சேர்க்கை
பள்ளிகளில் இந்த பாடபுத்தகங்களுடன், மாணவர்கள் பாடங்களை வீட்டில் இருந்து கற்கும் வகையில், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்கான கால அட்டவணையும் வழங்கப்பட்டது.கல்வி தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்கத்தவறியவர்கள், எப்போது வேண்டுமானாலும், கல்வி தொலைக்காட்சியின் யூடியூப் மூலமாக அந்த பாடங்களை கற்க முடியும். பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வினியோகம் மட்டுமல்லாது, மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது.

Next Story