திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.


திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
x
தினத்தந்தி 29 Jun 2021 1:04 AM IST (Updated: 29 Jun 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. 
 கூடுதல் தளர்வுகள்
கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்றின் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளர்வுகளுடன் வருகிற 5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது.
டீக்கடைகள், சாலையோர உணவு கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டீக் கடைகள் திறந்து செயல்பட்டன.
 பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் விற்பனை செய்யும் மின் சாதன விற்பனைக் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலனி விற்பனை செய்யும் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருள்கள், போட்டோ ஸ்டூடியோ, சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் செயல்பட்டன.
செல்போன் கடைகள்
மாநகரில் குமரன் ரோட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் நேற்று திறந்து விற்பனை தொடங்கின. இதில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டன இதனால் பழுதடைந்த வாகனங்களை சீரமைக்க அதிக வாகன ஓட்டிகள் சென்றதை காண முடிந்தது.
செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்தன இந்தக் கடைகளில் இளைஞர்கள் இளம் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தன.மென்பொருள், மின்னணு சாதனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன. அவை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
சிறு, குறு நிறுவனங்கள்
அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், மற்ற அரசு அலுவலகங்கள் 50 பணியாளர்களுடனும், சார்பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட்டன. தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டது. மற்ற தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் இயக்கப்பட்டது. சிறு, குறு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன், கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது.
அழகு நிலையங்கள், சலூன்கள்
அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்பட்டது. அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட்டது. மாநகர் முழுவதும் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் செயல்பட்டன. விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி நேற்று முதல் தொடங்கியது. பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் விளையாட்டு திடல்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சிக்காக செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்கள்  திறக்கப்படவில்லை.
சகஜ நிலைக்கு திரும்பிய திருப்பூர்
இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டது. இ-சேவை மையங்கள் வழக்கம்போல இயங்கின.
பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவில்லை. மற்ற பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக திருப்பூர் சகஜ நிலைக்கு நேற்று திரும்பியது. மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. இதனால் ஊரடங்கில் சிக்கித் தவித்த மக்கள் நேற்று சகஜமான நிலைக்கு திரும்பினர்.

Next Story