உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் வக்கீலுக்கு வீட்டுச் சிறை


உண்ணாவிரதம் இருக்க முயன்ற  பெண் வக்கீலுக்கு வீட்டுச் சிறை
x
தினத்தந்தி 29 Jun 2021 1:13 AM IST (Updated: 29 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் வக்கீல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

மதுரை,ஜூன்.
மதுரை புதூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மது ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டதாகவும், கொரோனா பெயரில் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த பிரதமர் மோடி முயல்வதாகவும் கூறி மதுரை காந்தி மியூசியம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதூர் போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அவர் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளாதவாறு வீட்டுச்சிறையில் வைத்தனர். இதற்கிடையே தவறான காரணங்களை கூறி பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த முயலும் நந்தினி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட துணைத்தலைவர் ஹரிகரன், அண்ணாநகர் வக்கீல் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

Next Story