அவினாசியில் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


அவினாசியில் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:15 AM IST (Updated: 29 Jun 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவினாசி, 
அவினாசி ஒன்றியம் காணாங்குளம் பகுதியில் மாட்டு இறைச்சி வியாபாரியிடம், அவினாசி தாசில்தார் தமிழ்ச்செல்வன் மாட்டு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் அதனை கண்டித்து நேற்று அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஆதி தமிழர் பேரவை துணை பொதுசெயலாளர் விடுதலை செல்வன் முன்னிலை வகித்து ஒருங்கிணைத்தார். 
இதில் தலித் விடுதலை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், மக்கள் அதிகாரம், சமூக விடுதலை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
 அவினாசி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி கானாங்குளம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வேலுச்சாமி என்பவர் மாட்டிறைச்சி கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் ஊராட்சியில் அனுமதிபெற்று வரி செலுத்தி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவினாசி தாசில்தார் கடந்த 26-ந் தேதி இரவு, இறைச்சி கடைக்கு சென்று ஆடு, கோழி விற்பனை செய்யலாம். மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை மீறி விற்பனை செய்தால் வழக்கு போடுவேன் என்று மிரட்டியுள்ளார். வேலுச்சாமி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தே சிறுபான்மை மக்கள் உண்ணும் மாட்டிறைச்சியை தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்ட அவினாசி தாசில்தார் மீது துறை ரீதியாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story