பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்; நெல்லை புதிய துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் பேட்டி


பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்;  நெல்லை புதிய துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2021 1:16 AM IST (Updated: 29 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என நெல்லை புதிய துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமார் தெரிவித்தார்.

புதிய துணை போலீஸ் கமிஷனர்

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜராஜன், தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை தமிழக சிறப்பு போலீஸ் பயிற்சி பள்ளி கமாண்டன்ட் சுரேஷ்குமார், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனராக சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

நெல்லை மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் ஜாமீனில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைெவளியை கடைபிடிப்பதுடன் தங்களது கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் நெல்லையில் பொறுப்பேற்பு

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சுரேஷ்குமார் கடந்த 2003-ம் ஆண்டு நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர் சேலம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.
தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனரானார். பின்னர் குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும், தமிழக சிறப்பு போலீஸ் பயிற்சி பள்ளி கமாண்டன்ட் ஆகவும் பணியாற்றினார். தற்போது நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story