மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
சமயபுரம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கதிரவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்த முடியும். மாணவ-மாணவிகளின் எதிர்காலமும், ஆரோக்கியமும் முக்கியம். அதனால்தான் கல்வி தொலைக்காட்சி திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வியறிவு 81 சதவீதமாக உள்ளது. கேரளாவில் 95 சதவீதமாக உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகம் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். தற்போதைய காலகட்டத்தில் தடுப்பூசி மிகவும் அவசியம். ஆகவே, தடுப்பூசி செலுத்தி கொள்ள மாணவிகள் முன்வர வேண்டும். பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் தக்க நேரத்தில் முடிவு எடுப்பார் என்று கூறினார். பின்னர், பள்ளியில் உள்ள வகுப்பறை, கழிவறை, நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். விழாவில், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம், பாரதி விவேகானந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசேகரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பத்மா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story