இந்து அமைப்புகள் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
இந்து அமைப்புகள் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி
தமிழக சட்டசபையில் ஜெய்ஹிந்த் என குறிப்பிடாமல் தமிழக கவர்னர் உரையை முடித்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்து பேசியுள்ளார். அவருடைய இத்தகைய பேச்சு தேச பக்தர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஈஸ்வரன் சட்டசபையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இந்து முன்னணி சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை நடந்தது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் போஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ஈஸ்வரனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்த தபால் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் இந்து எழுச்சி பேரவை சார்பில் ஈஸ்வரனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட செயலாளர் கமல்நாத் தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story