பாலசமுத்திரம் சிவன் கோவில் கும்பாபிஷேகம்


திருச்சி
x
திருச்சி

பாலசமுத்திரம் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொட்டியம்
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் தண்ணீர் துறை தெரு அரசமரத்து திடலில் கல்யாண பாலாம்பிகை உடனுறை கல்யாண சோமேஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு மற்றும் நவக்கிரக பூஜையும், அதனைத் தொடர்ந்து கும்ப அலங்காரம், வேதிகா பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை யாத்ரா தானம், கடம் புறப்பாடு மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில், பாலசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழனி பாதயாத்திரை குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.

Next Story