வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2021 1:38 AM IST (Updated: 29 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ்(வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவருடைய தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story