மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கீழகோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அவற்றை ஓட்டி வந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. பின்னர் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story