கிருஷ்ணகிரியில் பா.ஜனதா பிரமுகரை பீர்பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரியில் பா.ஜனதா பிரமுகரை பீர்பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பா.ஜனதா பிரமுகரை பீர்பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர்
கிருஷ்ணகிரியை அடுத்த பெரியஜெட்டிப்பள்ளத்தை சேர்ந்தவர் சிவா என்கிற மன்னன் சிவக்குமார் (வயது 44). பா.ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் ஓட்டலும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து பெரியஜெட்டிப்பள்ளத்திற்கு சென்று கொண்டிருந்தார். சுண்டம்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்து சிவக்குமாரை வழிமறித்து நிறுத்தினார்கள்.
வலைவீச்சு
முக கவசம் அணிந்தபடி வந்த அவர்கள், பீர்பாட்டிலால் சிவக்குமாரின் தலையில் தாக்கினார்கள். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை அந்த நபர்கள் பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பா.ஜனதா பிரமுகரை தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story