கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:39 AM IST (Updated: 29 Jun 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா நிவாரணம் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தொடங்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story